January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொடரை இழந்துள்ள இந்தியா கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியாவது பெறுமா?

photo: BCCI / Twitter

இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாயக்கிழமை  நடைபெறவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ஓட்டங்கள், 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்தியா அணி தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கன்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

சிட்னி போன்று கன்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானமும் முழுமையாக துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒத்துழைக்கக்கூடியது.

இங்கு இதுவரை நடந்துள்ள 9 ஆட்டங்களில் முதல் 2 ஆட்டங்களில் 2-வது துடுப்பாட்டம் செய்த அணியும், கடைசி 7 ஆட்டங்களில் முதலில் துடுப்பாடிய அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அணி இந்த மைதானத்தில் 2 போட்டிகள் விளையாடியுள்ளது.இதில் 2008-ம் ஆண்டில் இலங்கையுடனும் , 2016-ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுடனும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,ஏற்கனவே தொடரை இழந்துள்ள இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? அல்லது தொடரை அவுஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
.