January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘போர்முலா 1’ கார் பந்தய வீரர் ஹமில்டனுக்கு கொரோனா

photo: Lewis Hamilton/ Twitter

‘போர்முலா1’ கார் பந்தயத்தில் 7 முறை உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவரான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பக்ரைன் கிராண்ட்பிரி பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். நேற்று முன்தினம் காலை எழுந்ததும் ஹாமில்டன் தனக்கு சோர்வாக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அவருக்கு 2 முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லேசான வைரஸ் தொற்று அறிகுறியுடன் இருக்கும் அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனையில் பாதிப்பில்லை என்று முடிவு வந்தால் தான் மீண்டும் போட்டியில் பங்கேற்க முடியும். எனவே அவர் இந்த வாரம் இறுதியில் பக்ரைனில் நடைபெறும் சகிர் கிராண்ட்பிரி பந்தயத்தில் விளையாட முடியாது. இந்த சீசனின் கடைசி சுற்று பந்தயமான அபுதாபி நடைபெறவுள்ள கிராண்ட்பிரி போட்டி வருகிற 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதிலும் ஹமில்டன் கலந்து கொள்வது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.