February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபது 20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

pic: England Cricket/ Twitter
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு, ஒரு போட்டி எஞ்சிய நிலையில் தொடரை தன்வசப்படுத்திக் கொண்டது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களைப் பெற்றது.

Embed from Getty Images

குயின்டன் டி கொக் 30 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். பந்துவீச்சில் ஆதில் ரஷீட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

147 ஓட்டங்களை நோக்கி பதிலெடுத்தாடிய இங்கிலாந்து ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து சற்று பின்தங்கியது. ஆனாலும் டாவிட் மாலன் 55 ஓட்டங்களையும் அணித்தலைவர் இயோன் மோகன் 26 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.

இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது20 இங்கிலாந்து 2-0என முன்னிலை வகிக்கிறது.