
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-அவுஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் பகல்-இரவு மோதலாக நடைபெறவுள்ளது.
முதலாவது போட்டி தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய வீரர்களும், இந்த ஆட்டத்துடன் தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்களும் களத்தில் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
சிட்னி மைதானத்தில் கடைசியாக ஆடிய 8 ஆட்டங்களில் 7-ல் முதலில் துடுப்பாட்டம் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் நாணய சுழற்சி முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..