
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிருக்கான பிக்பாஷ் லீக் இருபது 20 தொடரில் சிட்னி தன்டர் அணி சாம்பியனாகத் தெரிவானது.
இதற்கான இறுதிப் போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிட்னி தன்டர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 86 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்தாடிய சிட்னி தன்டர் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது. எச்.சி நைட் 26 ஓட்டங்களையும், அணித்தலைவி ஹெய்னஸ் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
இது மகளிருக்கான பிக்பாஷ் லீக் இருபது20 தொடரில் சிட்னி தன்டர் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது சந்தர்ப்பமாகும். இதற்கு முன்பு அவர்கள் 2015-16 ஆம் ஆண்டு பருவ காலத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.