January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூஸிலாந்திடம் தோற்றது மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி டக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

ஒக்லன்டில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 16 ஓவர்களே துடுப்பெடுத்தாடக் கிடைத்தது. அந்த வாய்ப்பில் அவர்கள் 7 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களைப் பெற்றனர்.

அன்ரூ பிளெச்சர் 34 ஓட்டங்களையும், அலன் 30 ஓட்டங்களையும் பெற்றனர். அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் கிரான் பொலார்ட் 37 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 75 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் விளாசினார்.

டக்வேர்த் லூயிஸ் விதிமுறைப்படி நியூஸிலாந்து அணியின் வெற்றியிலக்கு 16 ஓவர்களில் 176 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது.

ஆயினும் கொன்வே 41 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நீஸாம் 48 ஓட்டங்களையும், மிச்செல் ஸேன்டர 31 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர். நியூஸிலாந்து அணி 15.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.