November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.சி.சியின் தசாப்தகால சிறந்த வீரர் விருதுக்கு சங்கா,மஹேல,ஹேரத்,மாலிங்க பரிந்துரை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் விருதுகளுக்கு இலங்கையின் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க, ரங்கன ஹேரத் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களை தெரிவுசெய்து சர்வதேச கிரிக்கெட் பேரவை விருது வழங்கி கௌரவிக்க வீரர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் ரசிகர்கள் வழங்கும் வாக்குகளுக்கு அமைவாக விருதுக்குரிய வீரர்கள் தெரிவுசெய்யப்பட இருக்கிறார்கள்.

இந்தப் பட்டியல்களில் அதிகம் இடம்பிடித்தவராக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராத் கோஹ்லி காணப்படுகிறார். அவர் சிறந்த கிரிக்கெட் வீரர் உட்பட 5 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் லசித் மாலிங்கவும், குமார் சங்கக்காரவும் தலா இரண்டு விருதுகளுக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக;

குமார் சங்கக்கார (இலங்கை), விராத் கோஹ்லி (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்ஸன் (நியூஸிலாந்து), ஏபி டிவிலியர்ஸ் (தென்ஆபிரிக்கா), ஸ்டீவன் ஸ்மித் (அவுஸ்திரேலியா), ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா).

தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் வீரர்களாக;

ரங்கன ஹேரத் (இலங்கை), விராத் கோஹ்லி, (இந்தியா), ஜோ ரூட், ஜேம்ஸ் அண்டசர்ன் (இங்கிலாந்து), கேன் வில்லியம்ஸன் (நியூஸிலாந்து), ஸ்டீவன் ஸ்மித் (அவுஸ்திரேலியா), யசீர் (பாகிஸ்தான்).

தசாப்தத்தின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் வீரர்களாக;

குமார் சங்கக்கார, லசித் மாலிங்க (இலங்கை), விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, மஹேந்திர சிங் தோனி (இந்தியா), மிட்ச்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா), ஏபி டிவிலியர்ஸ் (தென்ஆபிரிக்கா).

தசாப்தத்தின் அதிசிறந்த சர்வதேச இருபது20 வீரர்களாக;

லசித் மாலிங்க (இலங்கை) ரஸிட் கான் (ஆப்கானிஸ்தான்), விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா (இந்தியா), இம்ரான் தாஹிர் (தென்ஆபிரிக்கா), ஏரோன் பிஞ்ச் (அவுஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்தியத் தீவுகள்).

தசாப்தத்தின் தாற்பரியம் மிக்க கிரிக்கெட் வீரர்களாக;

மஹேல ஜயவர்தன (இலங்கை), விராத் கோஹ்லி (இந்தியா), கேன் வில்லியம்ஸன் (நியூஸிலாந்து), மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான்), பிரென்டன் மெக்கலம் (நியூஸிலாந்து), டேனியல் வெட்டோரி (நியூஸிலாந்து), மஹேந்திர சிங் தோனி (இந்தியா). ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பிரவேசித்து பிடித்த வீரருக்கு வாக்களிக்க முடியும். அதிக வாக்குகள் பெற்ற வீரர்கள் விருதுக்கு தெரிவுசெய்யப்படுவார்கள்.