January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்தாட்டம்: லிவர்பூல் – டொட்டன்ஹாம் முதலிடத்தில்

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் லிவர்பூல் கழக அணி புள்ளிகள் பட்டியில் டொட்டன்ஹாம் அணியுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.

லீஸ்டயர் கழக அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லிவர்பூல் அணி இந்த முன்னேற்றத்தை அடைந்தது.

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால் பந்தாட்டத் தொடரில் லிவர்பூல் மற்றும் லீஸ்டயர் கழக அணிகள் ஒரு போட்டியில் விளையாடின. போட்டியின் முதல் பாதியில் லிவர்பூல் கழக அணி இரண்டு கோல்களைப் போட்டது.

இவென்ஸ் 21ஆவது நிமிடத்திலும் ரொபட்சன் 41ஆவது நிமிடத்திலும் கோலடித்தனர். முதல் பாதியில் லீஸ்டயர் அணியால் கோலடிக்க முடியவில்லை. அதற்கமைய 2-0 என லிவர்பூல் அணி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் லிவர்பூல் அணி மூன்றாவது கோலையும் எட்டியது. அதனை பர்மினோ 86ஆவது நிமிடத்தில் அணிக்கு ஈட்டிக்கொடுத்தார்.

லீஸ்டயர் அணி வீரர்கள் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்த போதிலும் அவர்களால் கோல் எல்லையை நெருங்கமுடியவில்லை.

இறுதியில் 3-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் கழக அணி வெற்றிபெற்றது. இது இந்த தொடரில் லிவர்பூல் அணி பெற்ற ஆறாவது வெற்றியாகும்.

இந்த வெற்றிக்கமைவாக புள்ளிகள் பட்டியலில் லிவர்பூல் அணி ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் 20 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

டொட்டன்ஹாம் அணியும் இதே பெறுபேற்றுடன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.