November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோகோவிச்சை வீழ்த்தி ஏடிபி டென்னிஸ் இறுதி போட்டிக்குள் நுழைந்தார் டொமினிக் தீம்

டொமினிக் தீம்

லண்டனில் நடைபெற்றுவரும் டொப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு டொமினிக் தீம் தகுதிபெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் ஆகியோர் மோதினர்.

ஜோகோவிச்

முதல் செட்டில் 5-5 என சமநிலையில் இருந்தபோது, ஜோகோவிச்சிடம் இருந்து டொமினிக் தீம் போராடி 7-5 என வென்றார்.இதையடுத்து, டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை ஜோகோவிச் 7-6 என தன்வசப்படுத்தினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது. இதில் சிறப்பாக ஆடிய தீம் 7-6 என கைப்பற்றினார்.

இறுதியில், இதில் டொமினிக் தீம் 7-5 6-7 (10), 7-6 (5) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

இந்த வெற்றி டொமினிக் தீமின் 300வது வெற்றி ஆகும்.  இதன்மூலம் டொமினிக் தீம் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.