January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய- ஆஸி கிரிக்கெட்: ரோஹித் வெற்றிடத்தை ராகுல் நிரப்புவார் – மெக்ஸ்வெல்

இந்தியக் கிரிக்கெட் அணியின் விராட் கோஹ்லி இடம்பெறாமை அவுஸ்திரேலியாவுக்கு சாதகமானது என அவுஸ்திரேலிய சகலதுறை வீரரான கிளென் மெக்ஸ்வெல் கூறுகிறார்.

இந்தியாவுக்கு எதிரான அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் பற்றி கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருப்பது அவுஸ்திரேலிய அணிக்கு அனுகூலமாக இருக்குமென்றும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடருக்காக இரண்டு அணி வீரர்களும் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.  உபாதை ஏற்பட்டுள்ளதால் இருபது 20 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் ரோஹித்துக்கு பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள லோகேஷ் ராகுல் திறமையான வீரரென கிளென் மெக்ஸ்வெல் தெரிவிக்கிறார்.

இந்திய அணியில் சிறந்த துடுப்பாட்ட வரிசை இருப்பதால் அவர்களால் அவுஸ்திரேலிய அணிக்கு சவால் விடுக்க முடியுமெனவும் மெக்ஸ்வெல் கூறுகிறார்.

லோகேஷ் ராகுல் எந்த தருணத்திலும் களமிறங்கி திறமையாக துடுப்பெடுத்தாடும் ஆற்றல் படைத்தவர். ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.

அவர் தொடக்க வீரராக இறங்கினாலும் சரி, இறங்காவிட்டாலும் சரி, அவர் சிறந்த வீரராக விளங்குவார் என்பதை உறுதியாகக் கூறமுடியும் என்று புகழாரம் சூட்டியுள்ளார் மெக்ஸ்வெல்.