July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கோஹ்லி இல்லாததால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி” -ரிக்கி பொண்டிங் கணிப்பு

(Photo: virat kohli/ Facebook)

இந்திய அணியில் விராட் கோஹ்லி இல்லாவிட்டால் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளிலும் விராட் கோஹ்லி விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோஹ்லியின் மனைவிக்கு பிரசவம் நடைபெறவுள்ளதால் அவர் ஓய்வுபெற்றுக்கொண்டு நாடு திரும்பவுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் அணியில் கோஹ்லி இடம்பெறாதமை இந்திய அணிக்கு பெரும் இழப்பு என ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

கோஹ்லியின் அணித்தலைமை வியூகம் மற்றும் துடுப்பாட்டத் திறன் என்பன இந்திய அணியின் வெற்றியில் பெரும் பங்குவகிப்பதால் அவர் இல்லாமல் இந்திய வீரர்களால் சாதிப்பது கடினம் என ரிக்கி பொண்டிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

விராட் கோஹ்லி அணியில் இடம்பெறாத பட்சத்தில் அவருக்கு பதிலாக யாரை களமிறக்குவது? துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்துவது எப்படி? எனும் பல்வேறு சிக்கல்கள் இந்திய அணிக்கு இருப்பதாக பொண்டிங் குறிப்பிடுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முகாமைத்துவம் அணி வீரர்களை திட்டமிடுவதிலும் உறுதியான நிலைப்பாடுகளின்றியே இருக்கின்றது.

இதனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் எனவும் அவுஸ்திரேலிய முன்னாள் அணித் தலைவரான ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.