January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தகுதிகாண் சுற்றில் ஆர்ஜெண்டினாவுக்கு இலகு வெற்றி

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் தென் அமெரிக்க கண்டத்துக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டியில் ஆர்ஜெண்டினா மற்றும் பெரு அணிகள் விளையாடின.

போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜெண்டினா அணி 2-0 எனும் கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ஆர்ஜெண்டினாவுக்காக 17 ஆவது நிமிடத்தில் நிகொலஸ் கொன்சாலிஸும், 28 ஆவது நிமிடத்தில் லதோரா மார்டினஸும் கோல் போட்டுள்ளனர்.

2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெருவை அதன் சொந்த மண்ணில் ஆர்ஜெண்டினா வெற்றிகொண்ட முதல் சந்தர்ப்பமாகும்.

உலகக் கிண்ணக் காலபந்தாட்டத் தொடருக்கான தென் ஆமெரிக்க கண்டத்துக்கான தகுதிகாண் சுற்றின் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்ஜெண்டினா, 3 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் இருக்கின்றது.

இதேவேளை, கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 6-1 எனும் கோல் கணக்கில் ஈக்வடோரும், சிலியை 2-1 எனும் கணக்கில் வெனிசுவோலாவும் வெற்றிகொண்டுள்ளன.

பரகுவே மற்றும் பொலிவியா அணிகளுக்கிடையிலான தகுதிகாண் போட்டி 2-2 எனும் கோல்களுடன் சமநிலையில் முடிவடைந்துள்ளது.