November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? (11.10.2020 – 17.10.2020)

-கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா
(இயக்குனர்- ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)

செவ்வாய் கிரகம் போர் , ஆயுதங்கள் முதலியவற்றுக்கு அதிபதியாகையால் மேட இராசிக்காரர்களுக்கு உடம்பில் காயங்களின் வடுக்களாவது இருக்கலாம்.

அக்டோபர் 8 ஆம் திகதி கன்னி இராசியில் புதன் வக்கிர இயக்கத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஆறாம் இடத்துக்கு (எதிரி, கடன், நோய்) அதிபதியான புதன் வக்கிரம் பெறுவதால் எதிரிகளின் கை ஓங்காது. பணிந்து விடுவார்கள். வராத பணமும் வந்து சேரலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.    

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 11,12
அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு 

(கார்த்திகை 2ஆம்,3ஆம்,4ஆம் பாதம் ரோகினி)

ரிஷபம் என்பது காளை மாட்டை குறிக்கும். ரிஷபம் சிவபெருமானின் வாகனம். பெருமான் ரிஷபரூடராய் காட்சியளித்தார் என சிவபுராணங்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 8 ஆம் திகதி கன்னி இராசியில் வக்கிர இயக்கத்தில் புதன் சஞ்சாரம் செய்கிறார். தனஸ்தானமான 2 ஆம் வீட்டிற்கும் பூர்வ புண்ணியதானமான 5 ஆம் வீட்டிற்கும் உரியவர் புதன்.

இதனால் புதன் வக்கிரமடைவது சிறப்பித்துக்கூறும் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் பெரும் பாதிப்புகளை தரமாட்டார். நம்ப நடவுங்கள் யாரையும் நம்பி நடக்காதீர்கள். சூரியனோடு புதன் சேர்க்கையுற்றது பாதிப்பு இல்லை.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 13,14
அதிர்ஷ்ட நிறம் –  ஊதா

(மிருகசீரிடம் 3ஆம்,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்)

உங்கள் இராசி அதிபதி புதன் ஆவார். புதன் வித்தியாகாரகன் படிப்பு , நாவன்மை, பேச்சு, எழுத்து ஆகிய துறைகளில் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான் மிதுன இராசிக்காரர்கள் பிரகாசிக்க முடியும்.

உங்கள் இராசிநாதன் அக்டோபர் 8 ஆம் திகதி கன்னி இராசியில் வக்கிரம் பெறுகின்றார். இதுபோன்ற வக்கிரமடைந்த காலங்களில் எல்லா விடயங்களிலும் மிகுந்த பொறுமையுடன் நடந்துக்கொள்ளுங்கள்.

முன் கவனம் தேவை. பெரியவர்களின் ஆலோசனைப்படி நடந்துக்கொள்ளுங்கள். புதன் சூரியன் சேர்க்கை மனத்திருப்தியை தரும்.

அதிர்ஷ்ட திகதி  11,12,16
அதிர்ஷ்ட நிறம் – பச்சை

(புனர்பூசம் 4ஆம்பாதம், பூசம், ஆயிலியம்)

இந்த இராசிக்காரர்கள் நீரைப்போல் ஸ்த்திரத் தன்மையற்றவர்கள். இந்த இராசிக்கு சொந்தக்காரன் சந்திரன் குறைந்தும் நிறைந்தும் வளரக்கூடிய தன்மை பெற்றவன். அத்தோடு சந்திரன் மனதை ஆட்டிப்படைப்பவன். மனோகாரகன் ஆவான்.

அக்டோபர் 8 ஆம் திகதி முயற்சிதானமான 3 ஆம் இடத்துக்கும் விரயதானமான 12 ஆம் இடத்துக்கும் உங்கள் இராசிக்கு உரித்தான புதன்கிரகம் கன்னி இராசியில் வக்கிரமடைவதால் இளைய சகோதரிகள் மூலம் ஆதரவு கிடைக்கும். தாய் மாமன் வழி உறவினர்களால் நன்மையான காரியங்களுக்கு செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 13,14
அதிர்ஷ்ட நிறம் – செம்மஞ்சள்

(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)

சிம்மராசி பன்னிரு இராசிகளில் மிகவும் சக்தி வாய்ந்தது. நெருப்பு இராசியாகும். மனிதனின் இதயத்தை அடக்கி ஆள்கின்றது. மனிதனுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரிதான் வான் மண்டலத்திலும் சிம்ம இராசி முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

உங்கள் இராசிக்கு தனஸ்தானமான 2 ஆம் வீட்டிற்கும் இலாபதானமான 11 ஆம் வீட்டிற்கும் அதிபதியான புதன் அக்டோபர் 8 ஆம் திகதி கன்னி இராசியில் வக்கிரமடைந்து சஞ்சாரம் செய்கிறார். கொடுக்கல்- வாங்கல் விடயங்களிலும் , தொழில் பார்க்கும் இடங்களிலும் நிதானமாக இருந்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 15,16
அதிர்ஷ்ட நிறம் – பட்டு-வெண்ணிறம்

(உத்தரம் 2ஆம்,3ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3ஆம்,4ஆம் பாதம்)

இராசி சக்கரத்தில் ஆறாவது கன்னியாகும்.  பரிசுத்தத்திற்கு அடையாளம். கலப்படம் இல்லாதது. தன்னிலிருந்து எதையும் பிரித்துக் காட்டும் இயல்பு கொண்டது. ஆங்கிலத்தில் இந்த இராசியை விர்கோ என்பர். இதன் அர்த்தமும் பரிசுத்தம் தான்.

அக்டோபர் 8 ஆம்  திகதி கன்னி இராசியில் வக்கிர இயக்கத்தில் புதன் சஞ்சாரம் செய்கிறார். இந்த காலநேரத்தில் எல்லா விடயங்களிலும் முன் கவனத்துடன் நடந்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுங்கள். கூட்டு வியாபாரத்தில் கவனம் தேவை.  
அதிர்ஷ்ட திகதி- ஒக்டோபர் 11,12
அதிர்ஷ்ட நிறம் – பச்சை

 (சித்திரை 3 ஆம் 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)

எந்தச் செயலையும் முன் அனுபவத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பது இந்த இராசி நேயர்களின் சிறப்பு. சில முக்கிய இராசிகளைப் போல இதிலும் அவசர குடுக்கைகள் காணப்படுவார்கள்.

அக்டோபர்  8 ஆம் திகதி கன்னி இராசியில் உங்கள் இராசிக்கு 9 ,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்கிறார். தந்தை வழி உறவினர்களுடன் சில மன கசப்புகள் ஏற்படலாம்.

பங்கு விற்பனையிலும் சில தொந்தரவுகள் ஏற்படலாம். மாமன் வழிமுறையில் வாக்குவாதம் ஏற்படலாம். 12 இல் சூரியன் புதன் சேர்க்கை மனதிருப்தியை தரும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 13 ,14
அதிர்ஷ்ட நிறம் – கருநீலம்

(விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

தேளைப் போல் அவர்களின் பேச்சும் செயலும் கடுகடுப்பாக இருக்கும். எந்த காரியத்திலும் விடாப்பிடியாக ஈடுபடுவர். பிடிவாத குணம் கொண்டவர்கள். தான் என்ற கர்வமும் இவர்களிடம் இருக்கும்.

உங்கள் இராசிக்கு ஆயுள் தானமான (8 ஆம் வீடு) அஷ்டம- இலாப (11 ஆம் வீடு) தனாதிபதியாக உரியவர் புதன் .

அக்டோபர் 8 ஆம் திகதி கன்னி இராசியில் புதன் வக்கிரம் பெறுகிறார். ஆயுள்காரன் வக்கிரமடைவது நல்ல பலன்களைத் தரும். ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களும் உங்களுடன் உறவு பாராட்டுவர். பணம் கொடுக்கல்- வாங்கல்களில் கவனம் நன்று.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 11,12,15,16
அதிர்ஷ்ட நிறம் – மென் சிவப்
பு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

தனுசு இராசி இடுப்பையும், தொடைகளையும், இரத்த குழாய்களையும், மனதையும் ஆட்சி செய்கிறது. தனுசு இராசியை குறிக்க வில்லும் அம்பும் போட்டிருப்பதை இராசிக் கட்டங்களில் காணலாம். வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனும் பேச்சு சுபாவம் கொண்டவர்கள்.

உங்கள் இராசிக்கு 7 ,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன்கிரகம். அக்டோபர் 8 ஆம் திகதி கன்னி இராசியில் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்கிறார்.

மாமன் வழி திருமணப் பேச்சுகளில் இழுபறி நிலை ஏற்படலாம். தொழில் விடயங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். சூரியன், புதன் சேர்க்கை மன தைரியத்தை தரும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 13 ,14
அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)

எந்தத் திட்டத்திலும் தோல்வியை காணாமல் புதிது புதிதாக முன்னுக்கு வருவர். தொழிலகத்தை விஸ்தரித்துக் கொண்டுபோகும் தொழில் அதிபர்களில் பெரும்பாலானோர் இந்த இராசி நேயர்களாக இருப்பர்.

உங்கள் இராசிக்கு 6 ஆம் இடத்துக்கும் (எதிரி, நோய், கடன்) 9 ஆம் இடத்துக்கும் (பாக்கியஸ்தானம்) உரியவர் புதன். அக்டோபர் 8 ஆம் திகதி கன்னி இராசியில் புதன் வக்கிரமடைவதால் பகைவர்கள் பணிவர். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் சுமை குறையும். பூர்வீக சொத்து பிணக்குகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திகதி- ஒக்டோபர் 15 , 16
அதிர்ஷ்ட நிறம் – பட்டு-வெண்ணிறம்

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்)

சீரிய சிந்தனையும் தெளிவான திட்டங்களும் இருப்பதால் கும்ப இராசி நேயர்கள் நினைத்ததை சாதிப்பார்கள். ஓவியர், வரைபட மாதிரி தயாரிப்போர், சங்கீதம் ஆகிய துறைகளில் மிகவும் முன்னுக்கு வருவர்.

உங்கள் இராசிக்கு 5 க்கும்  (பூர்வ புண்ணியதானம்) 8 க்கும் (ஆயுள்தானம்) உரிய புதன் அக்டோபர் 8 ஆம் திகதி முதல் அட்டமதானத்தில் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்கிறார்.

உடல் ஆரோக்கியம் மேம்படும். புதுத்தெம்பு பிறக்கும். நோய் பஞ்சாய் பறந்துவிடும். பிள்ளைகள் விடயத்தில் முன்-கவனத்துடன் நடந்துக் கொள்வது நன்று.

அதிர்ஷ்ட திகதி- ஒக்டோபர் 14
அதிர்ஷ்ட நிறம் – கரு நீல
ம்

(புரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கடைசி இராசிக்கு ஏற்றாற்போல் மனித உடலின் கால்களை இந்த இராசி ஆட்சி செய்கின்றது. மேலும் சிறைச்சாலைகளையும், மருத்துவமனைகளையும், கட்டுபாட்டு நிலையங்களையும் இது ஆட்சி செய்கிறது.

உங்கள் இராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் அக்டோபர் 8 ஆம் திகதி கன்னி இராசியில் புதன் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்கிறார்.

தாய்வழி உறவினர்களுடன் வீணாக முரண்டு பிடிக்க வேண்டாம். திருமண பேச்சுகளும் இழுபறியாக இருக்கும். காணி பிணக்குகளும் தோன்றலாம்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 11
அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்