January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? (13.9.2020 – 19.09.2020)


(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)
 செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் நீங்கள், மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள் இப்பொழுது குரு கிரகம் வக்கிர நிவர்த்தி அடைந்து பாக்கிய ஸ்தானமான 9ஆம் இடத்தில் மூலதிரிகோண ஆட்சி பலம் பெற்று நவம்பர் 15 வரை சஞ்சாரம் செய்கின்றார். தந்தைவழி உறவுகள் மேம்படும், தந்தையின் உடல் நிலை சீராகும், பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும், புனித யாத்திரை களுக்கும் கரும காரியங்களிலும் நாட்டம் ஏற்படும்.


 (கார்த்திகை 2ஆம்,3ஆம்,4ஆம் பாதம் ரோகினி, மிருகசீரிடம் 1ஆம், 2ஆம் பாதங்கள்)
சுக்கிர கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள், மிகுந்த நகைச்சுவையாகப் பேசும் இயல்புடையவர்கள், குரு கிரகம் வக்கிர நிவர்த்தி அடைந்து நவம்பர் 15 ஆம் திகதி வரை அட்டம ஸ்தானத்தில் மூலத்திரிகோண பலம் பெற்று ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்கின்றார். நீண்டதூரப் பயணங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், கொடுக்கல் வாங்கல்களில், வியாபாரங்களில் கவனம் எடுங்கள், உடல் ஆரோக்கியம் பற்றியும் சிரத்தையாக இருங்கள்.


(மிருகசீரிடம் 3ஆம்,4ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1ஆம்,2ஆம்,3ஆம் பாதங்கள்)
 புதன் கிரகத்தின் அது ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் இராஜதந்திரியாக செயல்படும் திறமை கொண்டவர்கள், குரு கிரகம் வக்கிர நிவர்த்தி அடைந்து மூலத்திரிகோண பலம் பெற்று இடத்தில் சஞ்சாரம் நவம்பர் 15 வரை சஞ்சரிக்கின்றார். கூட்டுப் பங்கு விற்பனை வியாபாரம் மேலோங்கும், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும், சமூகத்தில் உங்கள் புகழ் மேலோங்கும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும், இல்லறம் சிறப்பு அடையும்.


(புனர்பூசம் 4ஆம்பாதம், பூசம், ஆயிலியம்)
சந்திர கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்கள், குரு கிரகம் வக்கிர நிவர்த்தி அடைந்து மூலத்திரிகோணம் ஆட்சி பலம் பெற்று 6ஆம் இடத்து குருவாக நவம்பர் 15 வரை சஞ்சரிக்கின்றார். தேவையில்லாமல் கடன் பெறுவதை இயலுமான வரை தவிர்த்துக் கொள்ளுங்கள்,  வழக்குகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள், உடல் நலத்தில் கவனம் கவனம் எடுங்கள்.

(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)
சூரிய கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள், எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்கும் ஆற்றல் கொண்டவர்கள். குருகிரகம் வக்கிர நிவர்த்தி பெற்று மூலத்திரிகோணம் ஆட்சி பெற்று பாவ புண்ணிய தானமான 5ஆம்இடத்தில் சஞ்சாரம் செய்வது, பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள், ஆண் வாரிசு சந்ததி கிடைக்கலாம், உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிறப்படைவார்கள், சொத்துக்களும் சேரலாம்.


(உத்தரம் 2ஆம்,3ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3ஆம்,4ஆம் பாதம்)
புதன் கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்மைய  உங்கள் குணம் இருக்கும். கிரகம் வக்கிர நிவர்த்தி அடைந்து நவம்பர் 15 வரை மூலத்திரிகோண ஆட்சியான குருவாக 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். தாய்வழி உறவுகள் மேன்மையடையும், புதிய காணி, வாகனம் சேரலாம் தாயாரின் உடல் நலம் மேம்படும், வியாபாரிகளும் நன்மை அடைவர்.


(சித்திரை 3ஆம்,4ஆம் பாதம், சுவாதி, விசாகம்)
சுக்கிர கிரக  ஆதிக்கத்தின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் ,எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நீதி கண் கொண்டு பார்ப்பவர்கள். குரு கிரகம் வக்கிர நிவர்த்தி அடைந்து நவம்பர் 15 வரை மூல திரிகோணம் ஆட்சி பெற்று 3இல் சஞ்சாரம் செய்கின்றார். எல்லா விடயங்களிலும் முன் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள், நம்பும் நடவுங்கள், நம்பி நடக்க வேண்டாம், இழுபறியுடன் முயற்சி கைகூடி வரும்.


(விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள், தேள் போன்ற  கொட்டும் சொற்களைப் பேசக் கூடியவர்கள, குரு கிரகம் வக்கிர நிவர்த்தி பெற்று நவம்பர் 15 வரை மூல திரிகோணம் பெற்று ஆட்சியான குரு இரண்டாம் இடத்தில் சந்திப்பது சிறப்பாகும். கல்வியலாளர்கள் சிறப்பு அடைவார்கள், தாராளமாக பணம் வந்து சேரும், உங்கள் சொல்லுக்கு மதிப்பு சமூகத்தில் ஏற்படும், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள் சிறப்படைவார்கள்.


(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)
வியாழக்கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசும் குணம் கொண்டவர்கள். உங்கள் ராசிநாதன் குரு வக்கிர நிவர்த்தி பெற்று மூல திரிகோணம் பெற்று ஆட்சி குரு நவம்பர் 15 வரை உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வதால் புதிய உத்வேகமும், நம்பிக்கையும் மனதில் ஏற்படும். எல்லா காரியங்களும் உங்கள் மனம் எண்ணியபடி திருப்தியும் கைகூடிவரும், வெற்றி நடைபோடுவீர்கள்.


(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)
சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள், சாதுரியமாக வேலைகளைச் செய்வதிலும் வேலை வாங்குவதிலும் சாமர்த்தியசாலிகள் குரு கிரகம் நிவர்த்தி அடைந்து தனுசு ராசியில் மூல திரிகோணம் ஆட்சியான குருவாக நவம்பர் 15 வரை சஞ்சாரம் செய்கின்றார். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, மங்களகரமான காரியங்கள் போன்றவற்றிற்கு செலவுகள் ஏற்படும்.

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1ஆம்,2ஆம்,3ஆம் பாதங்கள்) சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள், குடத்து பணக்காரர்கள் நீங்கள்தான். குரு கிரகம் வக்கிர நிவர்த்தி பெற்று நவம்பர் 15 வரை பதினோராம் இடத்தில் தனுசு ராசியில் மூலத்திரிகோணம் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்கின்றார். 11ஆம் இடமான ஏகாதசி தினத்தில் இருப்பது மிகவும் சிறப்பு. பொன், பொருள் வரவுக்கு குறைவிருக்காது, மூத்த சகோதர உறவுகள் மேம்படும், எல்லா விதத்திலும் நன்மை சேரும்.

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
வியாழன் கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள், சொகுசு வாழ்க்கையை விரும்புவார்கள். உங்கள் ராசிநாதன் குரு தனுசு ராசியில் மூல திரிகோணம் பெற்று ஆட்சி பெற்று வக்கிர நிலையை அடைந்து ஜீவனதானமான தொழில்ஸ்தானத்தில் பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். தொழில் மாற்றமோ இடமாற்றமோ நல்லதையும் உயர்வையும் தரும்.