November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஐரோப்பிய நேஷன்ஸ் லீக்” கால்பந்து: தகுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து

ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் கிண்ணக் கால்பந்தாட்டத்தொடருக்கு தகுதிபெறும் இங்கிலாந்தின் எதிர்பார்ப்பு தோல்வியில் முடிந்தது.

ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் இடம்பெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, போர்த்துக்கல், ஸ்பெய்ன், குரேஷியா உள்ளிட்ட 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.

இதில் இரண்டாவது தகுதிசுற்றுப் போட்டியொன்றில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் லிஸ்டயரில் விளையாடின.

போட்டியை சவாலாக ஆரம்பித்த பெல்ஜியம் முதல் பாதியில் இரண்டு கோல்களைப் போட்டது. பத்தாவது நிமிடத்தில் டிலமன்ஸூ ம் 13ஆவது நிமிடத்தில் மேட்டனஸூ ம் கோலடித்தனர்.

இங்கிலாந்து அணியால் கோலடிக்க முடியவில்லை. அதற்கமைய முதல் பாதியை 2-0 என பெல்ஜியம் கைப்பற்றியது.

இரண்டாம் பாதியில் இங்கிலாந்து அணி வீரர்கள் கோலடிக்க கடும் பிரயத்தனம் எடுத்தனர். எனினும் அவர்களின் சகல முயற்சிகளையும் பெல்ஜிய அணி வீரர்கள் முறியடித்தனர்.

இங்கிலாந்து அணியால் இறுதிவரை கோலடிக்க முடியாமல் போக போட்டியில் 2-0 என பெல்ஜிய அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது தகுதிப் பிரிவில் பெல்ஜியம் 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும் டென்மார்க் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.