November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளத் தயார்: ஸ்டீவன் ஸ்மித்

photo: Australian Men’s Cricket Team/Facebook

இந்திய வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான பயிற்சிகளில் அவுஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அணி இறுதியாக 2018 ஆம் ஆண்டு பருவ காலத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்று முதல் தடவையாக அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய சிறப்பைப் பெற்றது.

அந்த தொடரில் ஜஸ்பிரட் பும்ரா, மொஹமட் சமி உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் 50 க்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா நீக்கம்

இந்திய – ஆஸி. தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி

‘இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வெல்வது சவால்கள் நிறைந்தது’

அந்தக் கூட்டணி இம்முறை தொடரிலும் இடம்பெற்றுள்ளதால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க வேண்டிய நிலைக்கு அவுஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது.

என்றாலும், இந்திய வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள சிறப்பாகத் தயாராகிவருவதாக ஸ்டீவன் ஸ்மித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நீல் வோக்னரின் பௌண்சர் பந்துவீச்சில் நான்கு இன்னிங்ஸ்களிலும் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்தார்.

எனவே, அதே பாணியை பின்பற்ற இந்திய வீரர்களும் முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், நீல் வோக்னரைப் போல யாராலும் பந்துவீச முடியாது என ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தாலும் அனுபவத்தைக் கொண்டு அதனை சிறப்பாக எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.