
(Photo: LosPumas/Twitter)
சர்வதேச ரக்பி போட்டியில் பலம் வாய்ந்த நியூஸிலாந்தை முதல் தடவையாக வீழ்த்திய பெருமையை ஆர்ஜென்டினா அணி பெற்றுள்ளது.
கடந்த வாரம் அவுஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு பின்னர் நியூஸிலாந்து இந்தத் தோல்வியை சந்தித்துள்ளது.
ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் விளையாடும் முக்கோண ரக்பி தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் சிட்டினியில் ஆர்ஜென்டினாவும் நியூஸிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின.
சர்வதேச ரக்பி தரவரிசையில் நியூஸிலாந்து மூன்றாமிடத்திலும், ஆர்ஜென்டினா 16 ஆவது இடத்திலும் உள்ளன. என்றாலும் பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியை 25-15 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் ஆர்ஜென்டினா வெற்றிகொண்டது.
இது நியூஸிலாந்துக்கு எதிராக ஆர்ஜென்டினா 30 ரக்பி டெஸ்ட் போட்டிகளின் பின்னர் பெற்ற முதல் வெற்றியாகும்.
இதே போட்டித் தொடரில் கடந்த வாரம் அவுஸ்திரேலியாவிடம் 24-22 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வீழ்ந்திருந்தது.
ரக்பி வரலாற்றில் நியூஸிலாந்து 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை இந்தமுறை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.