-கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா (இயக்குனர்- ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்)
உங்கள் இராசிநாதன் செவ்வாய் இப்பொழுது வக்கிர இயக்கத்தில் மீன இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். வக்கிரமாக இருந்தாலும் குரு வீட்டுக்குச் செல்வதால் பெரும் பாதிப்பு ஏற்படாது.
பொதுவாக தைரியமானர்கள். செவ்வாயை ஆட்சியாகக் கொண்டவர் மேஷ இராசிக்காரர்கள் என்பதால் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழக்க வேண்டாம்.
பூமிக்கு அதிபதியானவர் செவ்வாய் வக்கிர இயக்கத்தில் இயங்குவதால் வராத பணம் வந்துசேரும். வீடு மாற்றம் , இடமாற்றம் எதிர்பாராத விதத்தில் நிகழலாம். (கார்த்திகை 2 ஆம், 3 ஆம், 4 ஆம் பாதம் ரோகினி)
உங்கள் இராசிக்கு 7 ஆம் , 12 ஆம் இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் இப்பொழுது வக்கிர இயக்கத்தில் மீன இராசியில் சஞ்சாரம் செய்கின்றார். குரு வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்யும் போது குரு உங்களுக்கு மங்கள யோகத்தை தருகின்றார்.
எனவே , அதிர்ஷ்டம் ஏற்படலாம். மேலும் புது வீடு கட்டி குடிபுகுவதற்கான காலங்களும் இப்பொழுது வருகின்றது. நீண்ட நாட்களாக தாமதித்து வந்த சுபகாரிய பேச்சுக்கள் எதிர்பாராத வண்ணம் நல்ல விதத்தில் முடிவாகும்.
உடன் பிறந்தவர்களின் ஆதரவும் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். தொழில் வியாபாரமும் மனத்திருப்தியுடன் இடம்பெறும். (மிருகசீரிடம் 3 ஆம்,4 ஆம் பாதம், திருவாதிரை, புனர் பூசம் 1 ஆம், 2 ஆம்,3 ஆம் பாதம்)
உங்கள் இராசிக்கு 6 ஆம், 11 ஆம் இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் இப்பொழுது மீன இராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.
உங்கள் இராசிக்கு 10 ஆம் இடமான தொழில்ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக கருதலாம். மேலும் வீட்டு பராமரிப்பில் உங்களது கவனம் அமைந்திருக்கும்.
மண், பூமி சம்பந்தப்பட்ட வகையில் இருந்த பிரச்சினைகள் அகலும். உடன் பிறந்தவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவோடு உங்கள் தொழில் உயர்ச்சியடையும். (புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)
உங்கள் இராசிக்கு 5ஆம் , 10 ஆம் இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் இப்பொழுது மீன இராசியில் வக்கிர இயக்கத்தில் குரு வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார்.
யோகக் காரராய் விளங்கும் செவ்வாய் 9 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஒளிமயமான வாழ்க்கையை அமைத்து தருவார் என்பதில் ஐயமில்லை. வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட இழுபறிகள் எல்லாம் சுமூகமாகி புதிய வாய்ப்புகளும் முயற்சிகளும் கைக்கூடிவரும்.
சொந்த தொழில் நடத்துபவர்களின் தொழில் நிலைமையும் சிறப்பாக அமையும். புதிய வீடு அல்லது சொத்துக்கள் வந்துசேரலாம். பூர்வீக சொத்து பிரச்சினைகளும் சுமூகமாக தீர்ந்துவிடும்.
(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)
உங்கள் இராசிக்கு 4 ஆம் , 9 ஆம் இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் இப்பொழுது வக்கிர இயக்கத்தில் மீன இராசியில் குருவின் வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். அட்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பது அவ்வளவு சிறப்பெனக் கூறமுடியாது.
இருப்பினும் என்றோ வாங்கிய சொத்துக்கள் விற்பனையாகி வருமானத்தைக் கொடுக்கலாம். விற்பனையாகி பெறும் பணத்தை கையில் வைத்துக் கொள்ளாம் புது இடம் வாங்குவதில் முதலீடு செய்வது நல்லது அல்லது வங்கியில் வைப்பிலிடுவதும் நல்லது.
இதனால் வீண்விரயங்களை தவிர்த்து விடலாம். கொடுக்கல் – வாங்கல் விடயங்களில் கவனம் தேவை. நம்ப நட நம்பி நடக்கவேண்டாம்.
(உத்தரம் 2 ஆம்,3 ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3 ஆம், 4 ஆம் பாதம்)
உங்கள் இராசிக்கு 3 ஆம் , 8 ஆம் இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் இப்பொழுது மீன இராசியில் குரு வீட்டில் வக்கிரம் பெற்று சஞ்சாரம் செய்கின்றார். நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல பலன்களை இது கொடுக்காது.
செவ்வாய் உங்கள் இராசிக்கு நேர்பார்வையில் இருப்பதால் உங்களுக்கு கோபம் அதிகம் வரலாம். உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேசிவிட்டு உறவினர்களின் பகையைத் தேடிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.
மேலும் கட்டிய வீட்டுக்கு போய் சேரவில்லையே என்ற மனோநிலையும் உங்களுக்கு இருக்கும். சில சொத்துக்கள் விற்கப்படாதிருப்பதையிட்டு மனதில் கவலை இருக்கும். அயலவர்களுடனும் உறவினர்களுடனும் அனுசரித்து செல்லுங்கள்.
மீன இராசியில் வக்கிர இயக்கத்தில் செவ்வாய் கிரகம் இப்பொழுது சஞ்சாரம் செய்கின்றார். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். அரச வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தகவல் செய்தி வந்துசேரும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் ஆரோக்கியத்தை கவனமாக பேணுங்கள்.
உங்களை விட்டு விலகிச் சென்ற சகோதரிகள் மீண்டும் உங்களிடம் வந்து சேர்வார்கள். நீங்கள் மனமகிழ்ச்சியடைவீர்கள்.
உங்கள் இராசிக்கு அதிபதியான , 6 ஆம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் இப்பொழுது மீன இராசியில் குருவின் வீட்டில் வக்கிர இயக்கத்தில் சஞ்சாரம் செய்கின்றார்.
5 ஆம் இடத்தில் செவ்வாய் வரும்போது சொத்து பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைத்து புதிய முதலீடுகளை செய்யும் வாய்ப்பும் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாமதப்பட்டுவந்த ஊதிய உயர்வு இப்பொழுது கிடைக்கும். அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல் வந்துசேரும்.
(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)
உங்கள் இராசிக்கு 5 ஆம், 12 ஆம் இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் மீன இராசியில் குருவின் வீட்டில் வக்கிர இயக்கத்தில் சஞ்சாரம் செய்கின்றார்.
சுகஸ்தானத்தில் அதாவது 4 ஆம் இடத்தில் செவ்வாய் வரும்போது ஆரோக்கிய தொல்லைகள் நீங்கிவிடும். நீங்கள் முயற்சி எடுத்தும் நிறைவேறாத காரியங்கள் இப்பொழுது உங்கள் மனம்போல் நிறைவேறும் காலமாக அமைந்திருக்கின்றது.
மேலும் புதிய சொத்துக்கள் வந்துசேரும். பிரிவினைப் பிரச்சினைகளும் சுமூகமாக தீர்ந்துவிடும். உறவினர்கள் குணம் அறிந்து நடந்துகொள்வர் . பிள்ளைகளின் கல்வி மேன்மையடையும்.
உங்கள் இராசிக்கு 4 ஆம் , 11 ஆம் இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். இப்பொழுது வக்கிர இயக்கத்தில் மீன இராசியில் குருவின் வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார்.
உங்கள் இராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புரிந்துணர்வோடு செயற்பட்டு பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்வீர்கள்.
நம்பிக்கையானவர்களிடமிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.
(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1 ஆம்,2 ஆம்,3 ஆம் பாதம்)
உங்கள் இராசிக்கு 3 ஆம் , 10 ஆம் இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்கிர இயக்கத்தில் இருக்கின்றார்.
மேலும் மீன இராசியில் குருவின் வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். சகோதரகாரகன் என்று சொல்லப்பட்டும் செவ்வாய் வக்கிர இயக்கத்தில் இருப்பதால் உடன்பிறப்புக்களின் வழியில் இருந்த ஆரோக்கிய தொல்லைகளால் செலவுகளும் ஏற்படலாம்.
மேலும் குரு வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சொத்து பிரச்சினைகள் சுமூகமாக தீர்ந்துவிடும். பதவியுள்ள தொந்தரவுகளும் படிப்படியாக குறையும். புதிய பதவிகளும் கிடைக்கலாம்.
உங்கள் இராசியில் வக்கிர இயக்கத்தில் இப்பொழுது செவ்வாய் சஞ்சாரம் செய்கின்றார். உங்கள் இராசிக்கு 2 ஆம் 9 ஆம் இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய்.
உங்கள் இராசிக்கு மிகவும் நன்மையைத் தருபவர். உங்கள் இராசியிலே அமரும் போது போதியளவு வருமானம் வந்துசேரும். வரவேண்டிய பணம் வந்துசேரும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
மேலும் சொத்துக்கள் வந்துசேரும். பாக பிரிவினை பிரச்சினை இருந்தால் அவையும் சுமூகமாக தீர்ந்துவிடும். சகோதரர்களும் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்வர்.