
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் இன்று தீபாவளிக்கு ஹாட் ஸ்டார் ஒடிடி (OTT) இணையவழி ஒளிபரப்பு சேவைகள் ஊடாக வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக இந்த படத்தின் டிரைலர் மிகப் பெரிய அளவில் வைரல் ஆகியிருந்ததோடு, படம் மீதான ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.
காமெடி, சமூக தத்துவங்கள், யதார்த்தமான தற்போதைய சமூக வாழ்வியல் என இந்தப் படத்தின் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்திருந்தன.
படத்தின் இயக்குனரான ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில், மூக்குத்தி அம்மன் படத்தின் சிறிய காமெடி காட்சி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் கடவுள் பெயரால் பொது மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் மனோ பாலாவை நயன்தாரா மிரட்டுவது போன்ற ஒரு காட்சி இருக்கிறது.
ஜெபக் கூட்டம் ஒன்றில் பவர் பவர் பவர் என கத்துவதை மூக்குத்தி அம்மன் படத்தில் நையாண்டி செய்துள்ளனர்.
#MookuthiAmman #AmmoruThalli is now streaming on @DisneyplusHSVIP
Happy Deepavali
pic.twitter.com/qd1r6w7yg6
— RJ Balaji (@RJ_Balaji) November 14, 2020
ஜீசஸ் பெயரால் மோசடி செய்வது அவருக்கு பிடிக்காது என்றும் ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்றும் நரகத்திற்கு உன்னை கொண்டு சென்று எண்ணெயில் போட்டு பொரித்து விடுவேன் என்றும் மனோபாலாவை நயன்தாரா மிரட்டியுள்ள காட்சி, அசத்தலாக உள்ளதாக நெட்டிசன்கள் வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன், சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் அம்மனாக அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.