January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வெல்வது சவால்கள் நிறைந்தது’

விராத் கோஹ்லி இல்லாவிட்டாலும் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர்.டெஸ்ட் தொடரை வெல்வது கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான நதன் லயன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரமே அணித்தலைவர் விராத் கோஹ்லி விளையாடுவார் என்பதுடன் அதன் பிறகு அவர் நாடு திரும்பவுள்ளார்.

மனைவிக்கு குழந்தை பிரசவம் இடம்பெறவுள்ளதால் விராத் கோஹ்லி விடுமுறை பெற்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து அவுஸ்திரேலிய அணியின் சுழல்பந்து வீச்சாளரான நதன் லியோனிடம் கருத்து தெரிவிக்கையில்;

விராத் கோஹ்லி இல்லை என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருக்கும். ஆனாலும், செட்டிஸ்வர் புஜாரா, அஜின்கெயா ரஹானே உள்ளிட்ட திறமை வாய்ந்த பல வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். அவர்களின் திறமைக்கு முன்னால் இலகுவாக வெற்றி பெற்றுவிட முடியாது.

ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுசேன், விராத் கோஹ்லி ஆகியோர் கிரிக்கெட் உலகின் தற்போதையை தலைசிறந்த வீரர்கள் என்றும் நதன் லியோன் தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக ஆரம்பமாகவுள்ளது.