January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

7-0 அபார கோல் வித்தியாசத்தில் போர்த்துக்கல் வெற்றி

அன்டோராவுக்கு எதிராக நடைபெற்ற நட்பு கால்பந்தாட்டப் போட்டியில் 7-0 எனும் அபார கோல் வித்தியாசத்தில் போர்த்துக்கல் அணி வெற்றிபெற்றுள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் நட்புப் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் அன்டோரா அணிகள் மோதிக்கொண்டன.

போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய போர்த்துக்கல் அணி, போட்டியின் முதல் அரையாட்டத்தில் 2 கோல்களைப் போட்டு முன்னிலையில் இருக்க, அன்டோராவால் கோல் எல்லையை நெருங்கவும் முடியவில்லை.

போட்டியின் இரண்டாம் அரையாட்டத்திலும் பந்தை தமது ஆதிக்கத்தில் வைத்துக்கொண்ட போர்த்துக்கல் அணி, மேலும் 5 கோல்களைப் போட்டது.

போட்டியின் 76 ஆவது நிமிடத்தில் அன்ரோடா அணி வீரர் கார்சியா மிராமொன்டெஸ் ஓன் கோல் ஒன்றையும் போட்டு, போர்த்துக்கலுக்கு பலம் சேர்த்துள்ளார்.

போர்த்துக்கல் அணியின் நட்ச்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோலைப் போட்டதோடு, சர்வதேச மட்டத்தில் அது அவரது 102 ஆவது கோலாகும்.

அன்டோரா அணி வீரர்களால் இறுதிவரை ஒரு கோலையேனும் போட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.