January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஞ்சலி நடிப்பில் விரைவில் “பூச்சாண்டி”

பூச்சாண்டி

நடிகை அஞ்சலி வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தெரிவு செய்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள “பூச்சாண்டி” திரைப்படமும் அவருக்கு சிறந்த வெற்றியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். இந்தப்படம் குழந்தைகள் கொண்டாடும் அட்டகாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை ஃபர்ஸ்ட் லுக் காட்டுகின்றது.

இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் படம் குறித்து கூறுகையில், “பூச்சாண்டி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் அபார வரவேற்பு, மனதிற்கு பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது.

இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக கொண்டு, வேடிக்கைகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் அஞ்சலி தனது அற்புதமான நடிப்பால், படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அஞ்சலி கண்டிப்பாக குழந்தைகள் விரும்பும் நாயகியாக மாறிவிடுவார். அஞ்சலியும், யோகிபாபுவும் பேயாக நடித்துள்ள பகுதிகளை, குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

95சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மீதமிருக்கும் காட்சிகளும் விரைவில் முடிக்கப்பட்டுவிடும். விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.

https://twitter.com/yogibabu_offl/status/1325788683421814785