October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? (8.11.2020 –14.11.2020)

-கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா (இயக்குனர்- ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கிறார். கடந்த ஓர் ஆண்டாக தனுசு இராசியில் சஞ்சரித்த குரு இப்பொழுது மகர இராசிக்கு செல்கின்றார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும்.

அங்கிருந்தபடி 2, 4, 6 ஆகிய இடங்களை பார்வையிடுகின்றார். இதன்மூலம் குடும்ப முன்னேற்றம், தாய் வழி அனுகூலம் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாராட்டு கிடைக்க வழிவகுப்பார்.

நீச குருவாக இருந்தாலும் குருவின் பார்வைக்கு பலன் உண்டு என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 8(கார்த்திகை 2 ஆம், 3 ஆம், 4 ஆம் பாதம் ரோகினி)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கின்றார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும். உங்கள் இராசிநாதன் சுக்கிரனுக்கு குரு பகவான் பகை கிரகமாக விளங்குபவர்.

அவரது பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களை பார்க்கின்றது. எனவே, திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைப்பட்ட பதவி உயர்வு ஏற்படும். மேலும் வியாழன் தோறும் விரதமிருப்பது நன்மையாகும்.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 9(மிருகசீரிடம் 3 ஆம்,4 ஆம் பாதம், திருவாதிரை, புனர் பூசம் 1 ஆம், 2 ஆம்,3 ஆம் பாதம்)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கிறார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும். உங்கள் இராசிக்கு 7 , 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான் நீசம் பெறுவது நன்மை தான்.

மகரத்தில் இருக்கும் போது குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் படுகின்றது. எனவே வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள், தாய் வழி ஆதரவு உண்டு.

உத்தியோகம் தொடர்பாக தூரதேச பிரயாணங்கள் மேற்கொள்ள நேரிடும். வியாழன் தோறும் குரு வழிபாடு செய்துகொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 8(புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கிறார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும். உங்கள் இராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு ,அவரது நேரடிப் பார்வை உங்கள் இராசியிலேயே படுகின்றது.

எனவே, உத்தியோகம் தொழில் போன்றவற்றில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெரும்.

மேலும் புதிய வேலைகளும் உங்களை தேடி வரலாம். வியாழன்தோறும் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்துகொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 8

(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கிறார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும். உங்கள் இராசிக்கு 5, 8 ஆம் இடத்திற்குரியவர் குரு ஆவார்.

எனவே, இக்காலத்தில் கைநழுவிச் சென்ற வாய்ப்புக்கள் கைக்கூடிவரும். குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் படுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சுப காரியங்கள் இடம்பெறும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். செல்வ நிலை உயர நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 12
(உத்தரம் 2 ஆம்,3 ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3 ஆம், 4 ஆம் பாதம்)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கிறார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும். அங்கிருந்தபடி உங்கள் இராசியை பார்க்கப்போகின்றார்.

அத்துடன் 9, 11 ஆம் இடங்களையும் பார்க்கப்போகின்றார். எனவே, ஆரோக்கியமற்ற நிலை அகலும். மேலும் வெளிநாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளும் சுமூகமாக தீர்ந்துவிடும்.

வியாழன் தோறும் விரதமிருந்து தட்சணாமூர்த்தியை வழிபடுவது மிகவும் நன்மையாக அமையும்.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 8

(சித்திரை 3 ஆம் 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கிறார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும். உங்கள் இராசிநாதன் சுக்கிரனுக்கு குருபகவான் பகை கிரகம் என்பதால் அவர் நீசம்பெறுவது ஒருவழியில் நன்மைதான்.

அவரது பார்வை 8, 10 , 12 ஆகிய இடங்களில் படுகின்றது. எனவே , தொழிலில் முன்பிருந்த பிணக்குகள் இப்பொழுது சுமூகமாக தீர்ந்துவிடும்.

புதிய வாய்ப்புக்கள் வந்துசேரும். வீடு மாற்றங்கள் ஏற்படலாம். குரு வழிபாடு செய்வது நன்மையாகும்.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 9

(விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கிறார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும். உங்கள் இராசிக்கு 2 , 5 ஆம் இடத்துக்குரியவர் குரு நீசம் பெறுவதால் எதையும் யோசித்து செய்வது நல்லது.

திடீர் விரயங்கள் ஏற்படலாம். குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய முக்கிய மூன்று இடங்களை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் நிகழும்.  மகிழ்ச்சியடைவீர்கள். புதிய வாய்ப்புக்களும் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 8 (மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கிறார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும். உங்கள் இராசி நாதனாகவும் சுகஸ்தானத்துக்கு அதாவது 4 ஆம் இடத்துக்கு அதிபதியாகவும் விளங்கும் குரு நீசம் பெறுவது அவ்வளவு சிறப்பல்ல.

குறிப்பாக ஆரோக்கிய தொல்லை ஏற்படலாம். மேலும் சிறுசிறு தொந்தரவு வந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசணை பெறுவது மிகவும் சிறப்பாகும்.

குருவின் பார்வை 6 , 8 , 10 ஆகிய இடங்களில் படுவதால் எதிரிகள் பணிந்துவிடுவார்கள். வழக்குகளின் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். மேலும் புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும்.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 8

(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கிறார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும். உங்கள் இராசியில் குரு நீசம் பெறுவதால் நன்மை , தீமை இரண்டும் இடம்பெறும்.

நம்பிக்கைக்குரியவர்கள் உங்களை விட்டுவிலகலாம். பொன், பொருட்கள் அடகு வைப்பதும் பிறகு மீட்பதுமாக இருப்பீர்கள். குருவின் பார்வை 5 , 7 , 9 ஆம் இடங்களைப் பார்ப்பதால் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

அதேநேரம் திருமண பேச்சுகளும் சிறப்பாக அமையும். அத்துடன் கைநழுவிச்சென்ற சந்தர்ப்பங்கள் கைக்கூடிவரும். தட்சணாமூர்த்தி வழிபாடு நல்லதாகும்.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 12

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1 ஆம்,2 ஆம்,3 ஆம் பாதம்)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கிறார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும். அங்கு 2, 11 ஆம் இடத்திற்குரிய குரு நீசம் பெறுவது அவ்வளவு சிறப்பல்ல.

பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். வாங்கியதை கொடுக்க முடியவில்லையே , கொடுத்ததை வாங்க முடியவில்லையே என்ற நிலை உங்களுக்கு ஏற்படும்.

மேலும் பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகையால் சிக்கல்கள் ஏற்படலாம். குருவின் பார்வை 4, 6 , 8 ஆகிய இடங்களை பார்ப்பதால் ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும்.

புதிய உத்தியோக முயற்சிகள் கைக்கூடும். நீண்டதொரு இடமாற்றங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 14 

(புரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

நவம்பர் 15 ஆம் திகதி மகர இராசிக்கு குரு சஞ்சரிக்கிறார். மகர இராசி குருவுக்கு நீச வீடாகும். உங்களுடைய இராசிநாதன் நீசமடைவது சிறப்பல்ல. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பிரச்சினைகளும் தோன்றலாம். தொழில் வளர்ச்சியில் திடீர் பாதிப்புக்கள் ஏற்படலாம். குருவின் பார்வை 3 ,5 ,7 ஆகிய இடங்களில் படுவதால் அவற்றால் சிறப்பு ஏற்படும்.

எனவே, உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். நல்லிணக்கம் ஏற்படும். சுப காரியங்கள் இடம்பெறும்.

அத்துடன் வியாழன்தோறும் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பானதாகும்.

அதிர்ஷ்ட நாள் – நவம்பர் 8