May 24, 2025 4:27:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்ஸிலோனா வெற்றி

சம்பியன்ஸ் லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் “ஜீ” குழுவுக்கான ஒரு போட்டியில் பார்ஸிலோனா மற்றும் டைனமோ கழக அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டி ஆரம்பமாகி 5ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் லியோனல் மெஸி முதல் கோலைப் போட்டார்.

முதல் பாதியில் டைனமோ கழக அணி வீரர்கள் கோலடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதன்படி 1-0 எனும் கோல்கணக்கில் முதல் பாதியில் பார்ஸிலோனா கழக அணி முன்னிலைப் பெற்றது.

இரண்டாம் பாதியில் 65 ஆவது நிமிடத்தில் பிகுவே பார்ஸிலோனா சார்பாக மற்றுமொரு கோலைப் போட்டார்.

75ஆவது நிமிடத்தில் டைனமோ கழக அணி சார்பாக பிகென்ஸ்கோ கோலொன்றைப் போட்டார். இறுதியில் 2-1 எனும் கோல் வித்தியாசத்தில் பார்ஸிலோனா கழக அணி வெற்றி பெற்றது.