October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம்பியன்ஸ் லீக் கால்பந்து: இன்டர் மிலானை தோற்கடித்தது ரியல் மெட்ரிட்

சம்பியன்ஸ் லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் இந்தப் பருவ காலத்தில் இன்டர் மிலான் கழக அணியை முதல் தடவையாக ரியல் மெட்ரிட் கழக அணி வெற்றிக்கொண்டது.

ரியல் மெட்ரிட் அணி சார்பாக கரிம் பென்ஸிமா 25 ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டார். தொடர்ந்து 33 ஆவது நிமிடத்தில் சேர்ஜயோ ராமோஸ் கோலடிக்க ரியல் மெட்ரிட் அணி இரண்டாவது கோலை அடைந்தது.

இது ரியல் மெட்ரிட் கழக அணி சார்பாக சேர்ஜியோ ராமோஸ் போட்ட 100 ஆவது கோலாகும். இதன் மூலம் ரியல் மெட்ரிட் அணியின் சிறந்த வீரர் ராமோஸ்தான் எனும் விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்டர் மிலான் அணி சார்பில் லட்ரோ மார்டினஸ் 35 ஆவது நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார். முதல் பாதியில் 2-1 எனும் கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளின் வீரர்களுமே கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர். என்றாலும் ஒருவராலும் அதனை அடைய முடியவில்லை.

80 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணி வீரரரான ரொட்ரிகோவின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. இதனால் ரியல் மெட்ரிட் அணியின் கோல் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

இன்டர் மிலான் கழக அணியால் இறுதிவரை கோலடிக்க முடியவில்லை. அதன்படி 3-2 எனும் கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வெற்றியை ஈட்டியது.

“பி” குழுவில் இடம்பெற்றுள்ள ரியல் மெட்ரிட் அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் உள்ளது.

இன்டர் மிலான் அணி 3 போட்டிகளில் 2 தோல்விகளுடன் 2 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தில் இருக்கிறது.