January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவிலிருந்து மீண்டார் ரொனால்டோ

(Photo:Facebook/ Cristiano Ronaldo)

போர்த்துகல் கால்பந்தாட்ட அணியின் தலைவரும், ஜுவான்டஸ் கழக அணி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.

35 வயதுடைய ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கடந்த ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி உறுதிசெய்யப்பட்டது.

இதனால் அவர் பார்ஸிலோனா கழக அணிக்கு எதிரான போட்டியையும், மேலும் இரண்டு ஐரோப்பிய லீக் கிண்ணப் போட்டிகளையும் இழந்தார்.

கடந்த இரண்டு வாரங்களை சுயதனிமைப்படுத்தலில் கழித்த ரொனால்டோவிடம் மூன்றாவது முறையாக இடம்பெற்ற  COVID-19 பரிசோதனைகளுக்கு பிறகு , அவருக்கு தொற்று இல்லை என ஜுவென்ட்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி அவர் அடுத்த வாரம் ஜுவான்டஸ் கழகத்துடன் இணைந்து கொள்ளவுள்ளார்.