January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வியன்னா ஓபன்: ஜொகோவிச் அதிர்ச்சித் தோல்வி

சர்வதேச டென்னிஸ் தரப்படுத்தலில் முதலிடம் வகிக்கும் சேர்பியாவின் நொவெக் ஜொகோவிச், வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றில் புதுமுக வீரரான இத்தாலியின் லொரன்சோ ஸொனேகோவிடம் அதிர்ச்சிச் தோல்வியடைந்துள்ளார்.

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஒஸ்ட்ரியாவில் நடைபெற்று வருகின்றது.

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நொவொக் ஜொகோவிச் 42ஆம் நிலையிலுள்ள இத்தாலியின் லொரன்சோ ஸொனேகோவுடன் மோதினார்.

லொரன்சோ ஸொனேகோ

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய லொரன்சோ ஸொனேகோ 6-2, 6-1 எனும் நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த வெற்றியானது லொரன்சோ ஸொனேகோ டென்னிஸ் விளையாட்டில் பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாகும்.

இதற்கு முன்னர் லொரன்சோ, டென்னிஸ் தரவரிசையில் உள்ள முதல் 10 வீரர்களையும் வெற்றி கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.