May 23, 2025 13:43:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி செயலகம் அருகே இரவிலும் தொடரும் போராட்டம்!

கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை அணிதிரண்ட இளைஞர்கள், இரவாகியும் அங்கே தொடர்ந்தும் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் குவிந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, இன்று முற்பகல் 9 மணியில் இருந்து காலி முகத்திடல் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் என்று பலரும் ஒன்று கூடினர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சென்று அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் ஜனாதிபதி செயலக  வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.