January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விமானத்தில் உலகம் சுற்றும் சாரா இலங்கை வந்தார்

Photo: Facebook/ CIARsrilanka

சிறிய ரக விமானத்தில் உலகை சுற்றி வரும் சாதனை பயணத்தில் ஈடுபட்டுள்ள பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இளம் விமானியான சாரா ரதர்போர்ட், கொழும்பு – இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

19 வயதான சாரா, உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற கின்னஸ் சாதனையை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்படி சிறிய ரக விமானமொன்றில் தனது பயணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பித்திருந்தார்.

5 கண்டங்களும் உள்ளடங்கும் வகையில் 52 நாடுகளில் தரையிறங்குவதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.

2022 ஜனவரி நடுப்பகுதியில் தனது பயணத்தை முடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனூடாக அமெரிக்காவை சேர்ந்த ஷேஸ்டா வைஸ் என்ற பெண் 2017 ஆம் ஆண்டில் விமானத்தில் உலகை சுற்றி வந்து நிகழ்த்திய சாதனையை சாரா முறியடிக்கவுள்ளார்.

This slideshow requires JavaScript.