May 23, 2025 10:13:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹட்டன் ரொசல்ல பகுதியில் ரயிலில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்

ஹட்டன் ரொசல்ல பகுதியில் ரயிலில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்துள்ளனர்.

ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 65 வயது தாய், 70 வயது தந்தை மற்றும் 40 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட உடரட்ட மெனிக்கே ரயிலில் மோதி, விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் நாவலப்பிட்டிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் தமது வீட்டை மூடிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் மூவரும் இன்று ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்ததாக அவர்கள் வாடகைக்கு வசித்த வீடுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.