January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தின் டீசர்!

விஜய் சேதுபதி நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘மாமனிதன்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் காயத்திரி, குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதியை வைத்து ‘தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி மீண்டும் ‘மாமனிதன்’ படத்தை இயக்குகிறார்.

ஒரு கிராமத்துப் பின்னணியில் மதங்களைக் கடந்து அனைவரிடமும் அன்பு காட்டும் கிராமத்து ஆட்டோ சாரதியாக இந்தப் படத்தில் வருகிறார் விஜய் சேதுபதி.

ஒரு ஆட்டோ சாரதியாக இருந்து அதன் பின்னரான படிப்படியான விஜய் சேதுபதியின் வளர்ச்சி என அவரின் மாறுபட்ட பிம்பங்களை காட்டுகிறது மாமனிதன் திரைப்படம்.

இந்த படத்தை இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வெற்றி கண்டார்.

இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளது மேலும் ஒரு சிறப்பாகும்.

இதனால் ரசிகர்களிடையே இந்த படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

இத்திரைப்படத்தின் இரு பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததுடன் மதங்களைக் கடந்து அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் ஒருவராக விஜய் சேதுபதி இந்த படத்தில் வருவதை நாம் டீசர் வாயிலாக அறிய முடிகிறது.

அதேவேளை ‘காந்தி டாக்ஸ், கமல்ஹாசனின் ‘விக்ரம்’, வெற்றிமாறனின் விடுதலை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏதுளு46 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

அத்துடன் ‘கடைசி விவசாயி’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.