இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4 ஆம் திகதி நிகழவுள்ளது.
இந்த சூரிய கிரகணமானது இலங்கை நேரப்படி, மதியம் 12:30 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 4 மணி நேரம் வரை நீடிக்கும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்தக் கிரகணம் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் தென்படாது என்றும் தென்னாப்பிரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தென்பகுதியில் தெரியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தக் கிரகணத்தை ‘ரிவர்ஸ் போலார் சோலார்’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக, பூமியை நிலவு மிகவும் வேகமாக மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசையில் சுற்றும். ஆனால், இந்த நிகழ்வின்போது, நிலவு கிழக்கு திசையிலிருந்து மேற்கில், சுழலும் என்று தெரிவிக்கின்றனர்.