சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகிய ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பிளாக்பஸ்டர் திரைப்படம் என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது மாநாடு திரைப்படம்.
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அண்மையில் நடிகர் சிலம்பரசன், இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகிய ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு குறுகிய கால இடைவெளிக்குப் பிறகு ஈஸ்வரன் படத்தில் நடித்த சிம்பு அதன்பின்னர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு படத்தில் நடித்து திரைப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து ‘மாநாடு’ திரைப்படம் கடந்த 25 ஆம் திகதி வெளியானது. எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்த மாநாடு திரைப்படம் சிம்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தத் திரைப்படம் வெளியானது முதலே நேர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்தவகையில் படம் வெற்றிகரமாக ஓடி, நல்ல வசூலை குவித்துள்ளதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது.
மாநாடு திரைப்படம் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகிய ஒரே வாரத்தில் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
டைம் லூப் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மாநாடு திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே சொல்ல வேண்டும் .
அந்த வகையில் சிம்பு தற்போது நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.