January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிறிஸ்டியன் கொலமனுக்கு 2 வருட போட்டித்தடை

(Photo: Christian Coleman/ Facebook)

100 மீற்றர் ஓட்டப்போட்டியில் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கொலமனுக்கு 2 வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் பங்கேற்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

24 வயதுடைய கிறிஸ்டியன் கொலமனிடம் கடந்த மே மாதம் ஒலிம்பிக் விழாவுக்கான இரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்படவிருந்தது. எனினும் அதற்கு அவர் சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இரத்த மாதிரி பரிசோதனையில் கலந்துகொள்வதற்காக கிறிஸ்டியன் கொலமனுக்கு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்ட போதிலும் அந்த மூன்றிலுமே அவர் பங்கேற்கவில்லை என பரிசோதனைக் குழு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் டோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஸிப் மெய்வல்லுநர் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்று உலக சாம்பியனாக மகுடம் சூடினார்.

தொடர்ந்து 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் கொலமன் இடம்பிடித்திருந்த நிலையில் அமெரிக்க குழாம் இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

கொவிட் 19 காரணமாக அடுத்த வருடத்துக்கு பிற்போடப்பட்டுள்ள ஒலிம்பிக் விழாவில் பங்கேற்கும் எதிர்பார்ப்பிலிருந்த நிலையில் கிறிஸ்டியன் கொலமனுக்கு இந்தப் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.