May 22, 2025 20:19:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம்: லிவர்பூலுக்கு இலகு வெற்றி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் எவ் மிட்ஜிலேன்ட் கழக அணிக்கு எதிரான போட்டியில்லிவர்பூல் கழக அணி 2-0 எனும் கோல் கணக்கில் இலகுவாக வெற்றியை ஈட்டியது.

போட்டியின் ஆரம்பம் முதலே இரண்டு அணிகளின் வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சிறப்பாக விளையாடினார்கள்.

ஆனால், ஒருவராலும் கோல் எல்லையை மாத்திரம் எட்ட முடியவில்லை. அதன்படி முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

என்றாலும் இரண்டாம் பாதியில் 55 ஆவது நிமிடத்தில் டியூகோ ஜோடா கோலடித்தார். இந்த கோலானது 128 வருட வரலாற்றைக் கொண்ட லிவர்பூல் அணியின் 10,000 ஆவது கோலாகும்.

போட்டி நிறைவை எட்டிய நிலையில் உபாதைக்கான மேலதிக நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் லிவர்பூல் அணி வீரரான மொஹமட் சாலா கோல் போட்டார். எதிரணியால் இறுதிவரை கோலடிக்க முடியவில்லை.

இது இந்தத் தொடரில் லிவர்பூல் அணி விளையாடிய இரண்டாவது போட்டி என்பதுடன் இரண்டிலுமே வெற்றிபெற்று “டி” குழுவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.