January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகலாவின் விடுதலை அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம்: சட்டத்தரணி

(படம்: அ.ம.மு.க)

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் சிறையில் உள்ள சசிகலாவின் விடுதலை குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என அவரது சட்டத்தரணி ராஜ செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நாளை ஏதாவது தகவல் வருமா? என எதிர்பார்க்கிறோம். அபராத தொகையை செலுத்துமாறு தகவல் கிடைத்தால் எனக்கு அதுபற்றி கடிதம் மூலம் தெரிவிப்பார்கள்.

அதன் மூலம் நாங்கள் உடனடியாக பணத்தை செலுத்த ஏற்பாடு செய்வோம். எனவே நாளை அல்லது நாளை மறுநாள் முக்கிய தகவல் சசிகலாவிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கிறோம்.சசிகலா விடுதலைப்பற்றி இன்னும் 2 நாட்களில் தெரிய வரும் என அவர் தெரிவித்துள்ளார்