October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரீமியர் லீக் கால்பந்தாட்டம்: வெற்றியை தனதாக்கியது டொடன்ஹாம்

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டத்தில் பேர்ன்லி கழக அணிக்கு எதிரான போட்டியில் 1-0 எனும் கோல் கணக்கில் டொடன்ஹாம் கழக அணி வெற்றிபெற்றது.

இது இந்தமுறை பருவகாலத்தில் டொடன்ஹாம் அணி பெற்ற நான்காவது வெற்றியாகும். போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை.

எனினும், இரண்டாம் பாதியில் டொடன்ஹாம் அணி வீரரான ஷொன் ஹெஉங் மின் 76 ஆவது நிமிடத்தில் கோலடித்து வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கினார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளுமே கோலடிக்க கடுமையாக முயற்சித்தன. ஆனால், அவர்களின் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இறுதியில் 1-0 எனும் கோல் கணக்கில் டொடன்ஹாம் கழக அணி வெற்றியை தன்வசப்படுத்தியது.