April 30, 2025 6:56:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகாராஷ்டிராவில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்!

File Photo

இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தின் காட்சிரோலி மாவட்டத்தில் 26 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்டிண்டோலா வனப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிப் படையினரின் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பத்தில் காவல்துறை தரப்பில் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக, நேற்று காலை மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதலில் இராணுவ கேர்ணல் அவரது குடும்பத்தினர், இராணுவ வீரர்கள் என 6 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், காட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.