ஜிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தயத்தில் பிரித்தானியாவின் டாஓ ஜியோகேகன் ஹார்ட் ஒட்டுமொத்த சாம்பியனாக மகுடம் சூடினார்.
ஜிரோ டி இத்தாலி சைக்கிள் பந்தயம் 1909 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இவ்வருடம் 103 ஆவது ஆண்டாக நடத்தப்பட்டது.
21 கட்டங்களைக் கொண்ட இந்த சைக்கிள் பந்தயம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
ஒவ்வொரு கட்டங்களிலும் வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டு மொத்தப் பந்தயத்தையும் குறைந்த நேரப் பெறுமதியில் கடந்தவரே சாம்பியன் பட்டத்துக்கு உரித்துடையவர் ஆவார்.
இவ்வருடப் பந்தயத்தின் மொத்தத் தூரம் 3361.4 கிலோ மீற்றர்களாகும். இந்தத் தூரத்தை பிரித்தானியாவின் டாஓ ஜியோகேகன் முதல் வீரராகப் பூர்த்திசெய்தார்.
மொத்தப் பந்தயத்தை அவர் 85 மணித்தியாலங்கள், 40 நிமிடங்கள், 21 செக்கன்களில் கடந்தார்.
இதன் மூலம் ஒட்டுமொத்த சாம்பியனாக பட்டம் வென்ற ஜியோகேகன், 2008 ஆம் ஆண்டு கிறிஸ் புரூமுக்கு பின்னர் ஜிரோடி இத்தாலி சைக்கிள் பந்தய சாம்பியனான முதல் பிரித்தானியராக வரலாற்றில் இணைந்தார்.
இவ்வருடப் பந்தயத்தை டாஓ ஜிஈஹோகனை விட 39 செக்கன்கள் தாமதமாகக் கடந்த அவுஸ்திரேலியாவின் ஜெய் ஹின்ட்லி இரண்டாமிடத்தையும், ஒரு நிமிடத்தை மேலதிகமாக எடுத்துக்கொண்ட நெதர்லாந்தின் வில்கோ கெல்டர்மென் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.