November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“போர்மியூலா 1 கார் பந்தயம்”: ஷூமேக்கரை முந்திய ஹெமில்டன்

போர்மியூலா வன் (formula 1) கார் பந்தயத்தில் அதிக கிராண்ட் பிரீ  வென்ற வீரர் எனும் சாதனையை பிரித்தானியாவின் லூவிஸ் ஹெமில்டன் தன் வசப்படுத்தியுள்ளார்.

போர்மியூலா வன் கார் பந்தயத்தில் போர்த்துக்கேய கிராண்ட் பிரீ பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பந்தயத்தை லூவிஸ் ஹெமில்டன் ஒரு மணித்தியாலம், 26 செக்கன்களில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த வெற்றியானது போர்மியூலா வன் கார் பந்தய வரலாற்றில் லூவிஸ் ஹெமில்டன் பெற்ற 92 ஆவது கிராண்ட் பிரீ வெற்றியாகும்.

இதன் மூலம் ஜேர்மனியின் முன்னாள் சாம்பியான மைக்கல் ஷூமேக்கர் வசமிருந்த 91 கிராண்ட் பிரீக்கள் வென்ற சாதனை முறியடிக்கப்பட்டது.

போர்த்துக்கேய கிராண்ட் பிரீயில் பின்லாந்தின் வெலடரி பொட்டாஸ் இரண்டாமிடத்தையும், பெல்ஜியத்தின் மார்க்ஸ் வெட்ஸபன் மூன்றாமிடத்தையும் அடைந்தனர்.

போர்மியூலா வன் கார் பந்தயம் என்பது ஒரு இருக்கையை மட்டுமே கொண்ட கார்களுக்கான மிகப்பெரிய பந்தயமாகும். சர்வதேச வாகன கூட்டமைப்பின் ஒப்புதலைப் பெற்றுள்ள இப்பந்தயம், போர்மியூலா வன் குழுமத்தால் நடத்தப்படுகிறது.

1950ஆம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வரும் போர்மியூலா வன் பந்தயம், கார் பந்தய வரலாற்றிலேயே மிகவும் பழமையான பந்தயமாகும்.