January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரங்கம் முழுக்க தெறிக்க வரும் ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த’ டீசர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் எதிர்வரும் 14ஆம் திகதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

‘அண்ணாத்த’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதற்கமைய அண்ணாத்த திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

அண்மையில் ‘அண்ணாத்த’ படத்திலிருந்து இரண்டு பாடல்களை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த’ என்ற ஒரு பாடலும் அடுத்ததாக நயன்தாராவுடனான காதல் பாடலான ‘சாரல் சாரல் காற்றே’ என்ற பாடலும் வெளியிடப்பட்டது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எதிர்வரும் 14 ஆம் திகதி அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது.

‘அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க’ என்ற வசனத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளதுடன் ‘அண்ணாத்த’ படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பதால் ரஜினியின் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.