May 24, 2025 12:16:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்

‘வைகைப் புயல்’ வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சுராஜ் இயக்கும் இந்தப்படத்தை ‘லைகா’ நிறுவனம்  தயாரிப்பதுடன் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

நடிகர் வடிவேலுவுக்கு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்ட், சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் பழைய உச்சாகத்தோடு வடிவேலு திரைப்படங்களில் நடிக்கத் தயாராகியுள்ளார்.

கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே வடிவேலு, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘நாய் சேகர்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் வடிவேலு செம்ம கெத்தாக 5 நாய்களுக்கு நடுவே கோட் சூட்டுடன் அமர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகியுள்ளது.

இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளைக் கூட வடிவேலு, ‘நாய் சேகர்’ படக்குழுவினருடன் தான் கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.