January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? (25.10.2020– 31.10.2020)

-கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா (இயக்குனர்- ஸ்ரீவித்யா ஜோதிடம்,கொழும்பு)

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)

உங்கள் வேலை பார்க்கும் இடங்களில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் சக அதிகாரிகளுடன் அவர்களது மதிப்பைப் பெற்று சிறப்பான உத்தியோகத்தை முன்கொண்டு செல்லலாம்.

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாரமாக இது காணப்படுகின்றது. குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். பெண் நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு உண்டு.

ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் இவ்வாரம் அவை அனைத்தும் உங்கள் மனம் போல் சரியாக அமைந்துவிடும். மேலும் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வணங்கிக்கொள்ளுங்கள்.

(கார்த்திகை 2 ஆம்,3ஆம்,4 ஆம் பாதம் ரோகினி)

இவ்வாரம் உங்களுக்கு சச்சரவுகள் அவ்வப்போது வரலாம். எனவே நிதானத்தை கடைப்பிடியுங்கள். அலுவலகங்களில் மிகப்பொறுப்புடனும் நிதானத்துடனும் நடந்துகொள்வதன் மூலம் வீணாக உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக மாட்டீர்கள்.

அத்துடன் தொழில் ரீதியாக கடும் உழைப்புடன், சிரமத்துடன் செயற்பட்டால் முன்னேற்றம் காணலாம். மேலும் குடும்பத்திலும் வாக்குவாதம் தோன்றி மறையும்.

சனிக்கிழமை தோறும் சனி பகவானை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வியாழக் கிழமைகளில் தட்சணா மூர்த்தி வழிபாடு செய்துகொள்ளுங்கள்.

(மிருகசீரிடம் 3ஆம்,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்)

எல்லா விடயங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். அலுவலகத்தில் உங்களுடன் பணி புரிபவர்களுடன் ஒத்துழைத்து உங்களுடைய வேலைகளை பார்த்துக் கொள்வது வீணான வாக்கு வாதங்களிலிருந்தும், வீணான சிரமங்களிலிருந்தும் உங்களை விடுபடச் செய்யும்.

தொழில் ரீதியாக முன்னேற்றமடைவீர்கள். பணமும் வந்துசேரும். குடும்பத்திலும் மகிழ்ச்சிகரமான நிலைமை இருக்கும்.

மேலும் தூர பயணங்களும் உங்களுக்கு ஏற்படலாம். அத்துடன் கேது பகவானும் நல்ல நிலையில் இருப்பதால் தேவையில்லாத பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.

(புனர்பூசம் 4ஆம்பாதம், பூசம், ஆயிலியம்)

நீங்கள் எதிர்பார்க்காத வண்ணம் உங்கள் பதவி உயரலாம். சில சில தடைகளுக்கு நீங்கள் முகங்கொடுக்க நேரிட்டாலும் அவற்றில் நீங்கள் வெற்றியடைவீர்கள். அது உங்களுக்கு நன்மையாகவே அமையும்.

சுயதொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நன்மைகள் வந்து சேரும்.பெண் நண்பர்களில் ஆதரவு கிடைக்கும்.

மேலும் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையாக அமையும்.

(மகம்,பூரம், உத்திரம் 1ஆம்பாதம்)

நீங்கள் தொழில் பார்க்கும் இடங்களில் மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் மனத் திருப்தியுடன் இருப்பீர்கள். எதிலும் பொறுப்பும் பொறுமையும் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

மேலும் புதிதாக எந்தவொரு விடயமும் செய்வதானால் பெரியவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். பெண்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

அத்துடன் பண வருவாய் சற்று குறைவாக இருந்தாலும் தேவைக்கு வந்து சேர்ந்து விடும். பெண் நண்பர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள். கேது பகவானுக்காக விநாயகரை வழிபடுவது நன்மையாகும்.

(உத்தரம் 2 ஆம்,3 ஆம், 4ஆம் பாதம், அத்தம், சித்திரை 3 ஆம், 4 ஆம் பாதம்)

இந்தவாரம் நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். அலுவலகத்திலும் உங்களுக்கு நல்ல மதிப்பு ஏற்படும். உத்தியோக உயர்வும் ஏற்படலாம்.

சுயதொழில் செய்பவர்கள் இலாபமடைவார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நல்ல மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். குதூகலமாக இருப்பீர்கள்.

எதிர்பாராத வண்ணம் தூர பயணங்கள் உங்களுக்கு ஏற்படலாம். மேலும் கேது பகவானும் நல்ல நிலையில் இருப்பதால் நன்மையான வாரமாக அமையும்.

 (சித்திரை 3 ஆம் 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)

பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்துகொள்வது மிகவும் சிறப்பானதாகும். இதனால் வீணான பிரச்சினைகளிலிருந்தும் சிக்கல்களிலிருந்தும் விடுபட்டுக்கொள்வீர்கள்.

வேலைபார்க்கும் இடங்களில் பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள். வீண் தர்க்கத்தில் ஈடுபட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மனத் திருப்தி ஏற்படும். மேலும் பெண்நண்பர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். மனமகிழ்ச்சியடைவீர்கள். குருபகவான் வழிபாடு நன்மையாக அமையும்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 19, 20, 21

(விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

நீங்கள் வேலைப்பார்க்கும் இடங்களில் அதிக பொறுப்புக்களை உங்களிடம் ஒப்படைப்பார்கள். எனவே, நிதானத்துடன் செயற்படவேண்டியிருக்கும். சிரமத்துடன் கடமைகளை செய்து முடிக்க வேண்டியிருக்கலாம். பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள்.

மேலும் உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறும்வண்ணம் பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தில் சில சில சச்சரவுகள் தோன்றலாம்.

எனவே, நிதானத்தை கடைபிடியுங்கள். குருபகவான் நல்ல நிலையிலிருப்பதால் பல பிரச்சினைகளிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 21, 22, 23

(மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

7 ½ சனியின் நடுக்கூரில் இப்பொழுது நீங்கள் அகப்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். எனினும் குரு சேர்ந்திருப்பதால் பெரும் பாதிப்பு இல்லை . அத்துடன் உங்கள் உழைப்பிற்குரிய பணம் வந்துசேரும். சுய புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்.

இதனால் வீணான குழப்பங்களிலிருந்து நீங்கள் விடுபட்டுக்கொள்வீர்கள். சுய தொழில் உங்களுக்கு நன்மையைத் தரும். அத்துடன் குடும்பத்தில் சில சில சச்சரவுகள் தோன்றிமறையலாம்.

மருத்துவ செலவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. நீங்கள் சனிபகவானையும் குருபகவானையும் வழிபடுவது நல்லது.

(உத்திராடம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம், 1ஆம் 2ஆம் பாதம்)

உங்கள் இராசிக்கு 12 ஆம் இடத்தில் சனியும் குருவும் சேர்ந்திருக்கின்றன. எனவே, செலவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். அதாவது அலுவலகத்தில் தொழில் பார்ப்பவர்களுடன் மிகவும் அந்நியோன்யமாக நடந்துகொள்ளுங்கள்.

அது உங்கள் பதவிக்கு நன்மையாக இருக்கும். தொழில் ரீதியாக மெது மெதுவாக ஒரு சிறப்பான நிலைமையை அடையலாம். அது நல்ல பலனை தரும். சிலரால் சில பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படும். எனவே , நிதானத்தை விட்டுவிடாதீர்கள்.

தேவைக்கேற்றவாறு உங்கள் கைக்கு பணமும் வந்து சேரும். பெண் நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சனி பகவானையும் குரு பகவானையும் வழிபாடு செய்வது பல சிரமங்களிலிருந்து நீங்கள் விடுபட வழிவகுக்கும்.

(அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம், சதயம், புரட்டாதி 1ஆம்,2ஆம்,3ஆம் பாதம்)

இலாபஸ்தானமான 11 ஆம் இடத்தில் குருவும் சனியும் சேர்ந்திருப்பது மிகவும் சிறப்பு. எனவே, தொழில் ரீதியாக நீங்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். பணமும் வந்துசேரும்.

மேலும் உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுப்புக்களை உணர்ந்து நடந்துகொள்வதால் நன் மதிப்பை பெற்றுக்கொள்ளலாம். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.

பெண் நண்பர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். மேலும் நீங்கள் எதிர்பார்த்த வண்ணம் எல்லாத் துறைகளிலும். நல்ல முன்னேற்றத்தை தரும் வாரமாக இவ்வாரம் உங்களுக்கு அமைகின்றது.

அதிர்ஷ்ட திகதி- அக்டோபர் 18, 19

(புரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் இராசிநாதன் 10 ஆம் இடத்தில் சனியுடன் சேர்ந்திருப்பதால் தொழில் ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். வேலைபார்க்கும் இடங்களில் உங்களுடன் பணிபுரிபவர்களுடன் மிகவும் நட்பாக நடந்துகொள்ளுங்கள்.

வீண்பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு கொள்ளலாம். கூட்டு வியாபாரமும் உங்களுக்கு நன்மையைத் தரும். அத்துடன் குடும்பத்தில் அவ்வப்போது சில வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

எனவே, பொறுமைகாத்து நடவுங்கள். வீண் சச்சரவுகளிலிருந்தும் நீங்கள் விடுபட்டு கொள்ளலாம். வியாழக்கிழமை குருவழிபாடு செய்வது நன்மையாகும்.