திடீரென முடங்கிய பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன 6 மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளன.
உலகளாவிய ரீதியில் திங்கட்கிழமை இரவு முதல் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கின.
இது தொடர்பில் பயனாளர்கள், டுவிட்டரில் பதிவிட்டு பேஸ்புக் நிறுவனத்திற்கு முறையிட்டு வந்தனர்.
இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாரை சீர் செய்து, 6 மணித்தியாலங்களின் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கையெடுத்துள்ளது.
எனினும் தொழில்நுட்பக் கோளாறு எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரையில் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்தக் காலப்பகுதியில் பயனாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
உலகளாவிய ரீதியில் நீண்ட நேரத்திற்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடங்கிய முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் இதேபோன்ற முடக்கம் ஏற்பட்ட போதும், சில மணி நேரத்தில் அது சீர் செய்யப்பட்டிருந்தது.
திங்கட்கிழமை ஏற்பட்ட முடக்கத்தால் பேஸ்புக் நிறுவனம், 6 பில்லியன் டொலர் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.