July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிக்பாஸ்’ – சீசன் 5: அறிமுகமில்லாத நிறைய புதுமுகங்கள்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ சீசன் – 5 தொடங்கியுள்ளது.

ஒக்டோபர் 3 ஆம் திகதி முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

இம்முறை பிக்பாஸ் சீசன் 5 -இல் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்துகொண்டுள்ள 18 போட்டியாளர்களில், தெரிந்த முகங்களாக விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா, நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, சில பாடகர்கள் என குறைந்த அளவே இருக்கின்றனர்.

இம்முறை போட்டியில் பங்கெடுப்பவர்களில் அதிகளவானோர் மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

மேலும் இம்முறை பிக் பாஸ் சீசன் 5 வில் திருநங்கைகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் இம்முறை பெரிய அளவில் பேசப்படும் சினிமா நட்சத்திரங்களுக்கு பிக்பாஸ் வீட்டினுள் வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்துவரும் நடிகர்களுக்கும், லட்சியத்தை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கும் இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இம்முறை நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் பிக்பாஸ் வீடு எவ்வாறு இருக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.