January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மிரட்டும் சிம்புவின் ‘மாநாடு’ டிரெய்லர்!

நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாநாடு டிரெய்லர் வெளியாகிய 2 மணி நேரத்திற்குள்  10 இலட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், அஞ்சனா கீர்த்தி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

உடல் எடையை குறைத்து ஆக்‌ஷன் காட்சிகளில் பழைய சிம்புவாக இந்தப்படத்தில் கலக்கியிருக்கிறார் .

பட டிரைலரில் வரும் வசனங்கள் தாறுமாறாக வைரலாகி வருவதுடன் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார்.

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் சிம்பு நடித்து வெளிவரும் ஆக்‌ஷன் படங்களில் இதுவும் ஒன்று.

பொலிஸ் காதாப்பாத்திரத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யா, தனக்கே உரிய பாணியில் வசனங்களை பேசி மிரட்டியிருக்கிறார்.

மேலும், டிரெய்லர் முடியும்போது நடிகர் சிம்பு நடுவிரலைக் காட்டும் போது, என்ன இவன் மந்திரம் ஏதாவது தெரிஞ்சு வச்சிருக்கானா? என எஸ்.ஜே. சூர்யா கூறும் வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாநாடு திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது.