January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்யாவின் ‘அரண்மனை-3’ டிரெய்லர் வெளியீடு!

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அரண்மனை-3’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தை சுந்தர்.சி. உருவாக்கியிருக்கிறார்

இதில் கதாநாயகனாக ஆர்யா நடித்திருக்கிறார், ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய நாயகிகளும் விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘அவ்னி’ சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யா.சி இசையமைத்துள்ளார். அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

தற்போது அரண்மனை- 3 படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அரண்மனை-3 படத்தின் செம திரில்லான டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்யாவின் அரண்மனை- 3 படத்திலும் காலமாவதற்கு முன்பாக நடிகர் விவேக் நடித்திருந்த நிலையில், இந்த டிரைலரின் கடைசி காட்சியில் விவேக் மற்றும் யோகி பாபுவின் கையை பேய் பிடித்திருக்க விவேக் சொல்லும் காமெடி பன்ச்  ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் நடிகர் விவேக் இல்லாததை எண்ணி ரசிகர்கள் கலங்கி வருகின்றனர்.

இந்த படம் வருகிற அக்டோபர் 14 ஆம் திகதி ஆயுத பூஜையன்று தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.