January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.

இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே எல்லா கோவில்களுக்கும், நிகழ்வுகளுக்கும், படப்பிடிப்புக்கு சென்று வருகின்றனர்.

அதேநேரம், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், சுவாமி தரிசனம் முடித்து வெளியே வந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துள்ளதுடன், இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் விரைவில் ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. அதேபோல், விக்னேஷ் சிவன் நயன்தாரா ,சமந்தாவை வைத்து இயக்கி தயாரிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

எதிர்வரும் தீபாவளியன்று, ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படமும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், திடீரென நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.

இது குறித்த வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.