July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (26) வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மகன், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

‘கோலமாவு கோகிலா’ படத்தை போலவே இப்படத்திலும் ஒரு குடும்ப பின்னணியை வைத்து திரைக்கதை நகர்கிறது என்பதை டிரெய்லரை வைத்துப் பார்க்கும்போது புரிகிறது.

டாக்டர் பட டிரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களில் 40 இலட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக்கி வருவதுடன், ட்ரெய்லரில் வரும் பட வசனங்களை பார்க்கும்போது டாக்டர் படத்தில் நகைச்சுவைக்கு குறைவே இருக்காது என தெரிகிறது.

சிவகார்த்திகேயன், யோகிபாபுவின் மிரட்டலான நகைச்சுவையும் இப்படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘டாக்டர்’ படத்தில் குடும்பமாய் நடித்து சிறுமிகளை கடத்துவதாக ட்ரெய்லரில் காட்டப்பட்டிருக்கிறது.