January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவு தினத்துக்கு மண்டியிட்டபடியே நடந்து சென்று அஞ்சலி

இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் (26) எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சாந்தி ராஜா என்ற இளைஞர் பாலசுப்ரமணியம் பல்வேறு மொழிகளில் பாடிய 425 பாடல்கள் அடங்கிய டேக்கை கழுத்தில் அணிந்து நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மண்டியிட்டபடியே நினைவிடத்துக்கு நடந்து சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.இளைஞரின் இந்த உருக்கமான செயல் அங்கிருப்பவர்களை கண்கலங்க செய்தது.